இந்தியாவின் மல்கொம் எக்ஸ் ‘ராவன்’ சந்திரசேகர் ஆசாத்தின் விடுதலைக்கான கோரிக்கை !

Spread the love

உத்திரப்பிரதேச மாநில அரசினால் தலித் போராளி மற்றும் “பீம் படை”த் தலைவர் சந்திரசேகர் ஆசாத் ‘ராவன்’ தொடர்ச்சியாக, அநியாயமான முறையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதற்கு எழுத்தாளர்களும், திரைப்பட தயாரிப்பாளர்களும், கலைஞர்களும், மாணவர்களும், கல்வியாளர்களும் ஆகிய நாங்கள், சமூக இயக்கங்களுடன் இணைந்து எமது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றோம்.

ஆசாத் 2017 ல் இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்கு எதிரான வன்முறை, வன்புணர்வ, மனிதாபிமானமற்ற தீண்டாபழக்கவழக்கங்கள், சமூக, கலாச்சார மற்றும் அரசியல் பாகுபாடுகளுக்கு உள்ளான ஒரு சமூகத்தின் உரிமைக்காக குரல் எழுப்பியதன் காரணமாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தலித் மக்களுக்கு எதிரான குற்றச்செயல்களுக்கு, உயர்மட்ட தலையீட்டின் காரணமாக, தண்டனை விலக்கு அளிக்கப்படுகிறது. நீதித்துறை மூலமும்  அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த முடியாதுள்ளது.

ஆசாத் மற்றும் அவரது சகாக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு ஒரே காரணம், அவர்கள் உயர்சாதி தனியார் படையினரின் அச்சுறுத்தலுக்கோ அல்லது அரச இயந்திரத்தின் வலுவான நெருக்குதல்களுக்கோ அடிபணிய மறுக்கின்றனர் என்பதாகும். அமெரிக்காவில் கறுப்பின சமூகத்தின் தலைவரான மால்கம் எக்ஸ் போலவே, ஆசாத், அச்சமின்றி, தலித் உரிமைகளை பாதுகாப்பதற்கான வழிகளைத் தேடுகிறார். அவரின் இந்த வழி ஆக்கபூர்வமானதாகவும் செயல்திறன் கொண்டதாகவும் இருப்பதோடு திறம்பட செயல்படவும் செய்கிறது.

வெறும் பேச்சளவில் அல்லாமல், ஆசாத், இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய இந்தியாவின் மிகச் சிறந்த அறிவாளர்களில் ஒருவரான டாக்டர் பீமிரோ அம்பேத்கர் அவர்களின் பெயரில் “பீம் படை” என்ற ஒன்றை உருவாக்கி, அதில் தலித்துகளையும் இணைத்துக்கொண்டார். இப்படையின் முக்கிய குறிக்கோள் மேற்கு உத்தர் பிரதசத்தில்  தலித் மாணவர்களின் நன்மை கருதி 300 க்கும் அதிகமான கல்வி வட்டங்களை அமைப்பதும் உயர்சாதியினரின் வன்முறையிலிருந்து தற்காத்தலுமாகும்.

உத்தரபிரதேசத்தினசஹரன்பூர் மாவட்டத்தில் உயர் ஜாதிய ராஜபுத்திரர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து வன்முறைகளை தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில்  ஆசாத் கைது செய்யப்பட்டார். நவம்பர் 2017 ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் அவருக்கும் அவரது சகாவான கமால் வாலியாவுக்கும் எதிரான நான்கு வழக்குகளிலும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்றும் அரசியல் ரீதியானவை என்றும் அறிந்ததால் அவ்விருவருக்கும் ஜாமீன் வழங்கியது. வன்முறைகளில் ஆசாத்துக்கு சம்பந்தம் இருந்ததாகவோ அல்லது ஏதுமோர் ஆயுதத்தை அவர் வைத்திருந்தார் என்பதற்கோ எந்த ஓர் ஆதாரத்தையும் பொலிஸாரினால் சமர்ப்பிக்க முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *